டிஎன்பிஎஸ்சி தேர்வு எழுத குறிப்பிட்ட நேரத்திற்குள் அனுமதிக்காததால் தேர்வு மைய கதவினை உடைத்து உள்ளே புகுந்த தேர்வர்கள்: காஞ்சிபுரத்தில் பரபரப்பு

காஞ்சிபுரம், மே 8: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் தமிழ்நாடு ஊரக வளர்ச்சி பொறியியல் சார்நிலைப் பணிகளில் அடங்கிய ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையில் உள்ள சாலை ஆய்வாளர் பதவிக்கான எழுத்துத் தேர்வு நேற்று காஞ்சிபுரம் அடுத்த ஏனாத்தூர் பகுதியில் அமைந்துள்ள சங்கரா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் காலை மற்றும் பிற்பகல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு தேர்வர்களுக்கு அதற்கு உண்டான நுழைவுச்சீட்டு அனுப்பப்பட்டது.

இந்நிலையில், காலையில் தேர்வு முடிந்து பின் மதியம் 2 மணிக்கு துவங்க வேண்டிய தேர்வுக்கு வரும் தேர்வர்கள் 30 நிமிடம் முன்னதாக தேர்வு மையத்தின் உள் நுழைய வேண்டும் என விதிகள் உள்ள நிலையில் மதியம் 1.30 மணி அளவில் தேர்வு மைய கதவுகள் மூடப்பட்டதால் 50க்கும் மேற்பட்ட தேர்வர்கள் உள்ளே விட கோரி காவல் துறையிடம் பெரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.அப்போது, இரு தரப்புக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு வந்த நிலையில் திடீரென தேர்வர்கள் நுழைவாயில் கதவை உடைத்து தேர்வர்கள் உள்ளே புகுந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

The post டிஎன்பிஎஸ்சி தேர்வு எழுத குறிப்பிட்ட நேரத்திற்குள் அனுமதிக்காததால் தேர்வு மைய கதவினை உடைத்து உள்ளே புகுந்த தேர்வர்கள்: காஞ்சிபுரத்தில் பரபரப்பு appeared first on Dinakaran.

Related Stories: