செங்குன்றம் அருகே ஆட்டோவில் கஞ்சா கடத்திய 2 பேர் சிக்கினர்: ஒரு கிலோ பறிமுதல்

புழல்: செங்குன்றம் அருகே ஆட்டோவில் கஞ்சா கடத்திய 2 பேரை கைது செய்த போலீசார், ஆட்டோ மற்றும் ஒரு கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். செங்குன்றம் அடுத்த பாடியநல்லூர் சோதனைச்சாவடியில் செங்குன்றம் போலீசார் நேற்று வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சோழவரத்தில் இருந்து செங்குன்றம் நோக்கி வந்த ஆட்டோவை மடக்கிப் பிடித்தனர். இதில் ஆட்டோ டிரைவர், பயணி என இருவரும் முன்னுக்குப்பின் முரணாக பேசியதால் சந்தேகம் அடைந்த போலீசார் ஆட்டோவை சோதனை செய்தனர்.

அப்போது ஆட்டோ சீட்டுக்கு கீழ் ஒரு கிலோ கஞ்சா பொட்டலம் இருந்தது தெரிய வந்தது. இதனையடுத்து ஆட்டோ மற்றும் கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் இருவரையும் கைது செய்து செங்குன்றம் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் கைதானவர்கள் மாத்தூர் எம்எம்டிஏ பகுதியைச் சேர்ந்தவர்களான ரமேஷ் குமார்(40), ஆட்டோ டிரைவர் ரகுநாதன்(60) என்பது தெரிய வந்தது. இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்த போலீசார், அவர்களை பொன்னேரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

The post செங்குன்றம் அருகே ஆட்டோவில் கஞ்சா கடத்திய 2 பேர் சிக்கினர்: ஒரு கிலோ பறிமுதல் appeared first on Dinakaran.

Related Stories: