துறையூர் பஸ்நிலையம் அருகே திமுக சார்பில் கோடைகால தண்ணீர் பந்தல் திறப்பு

 

துறையூர், மே 1: துறையூர் திமுக நகர, ஒன்றியம் சார்பில் கோடைகால தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டது.துறையூர் பேருந்து நிலையம் அருகே நகர, ஒன்றிய திமுக சார்பில் அமைக்கப்பட்ட கோடைக்கால தண்ணீர் பந்தலை மாவட்ட ஊராட்சி தலைவர் தர்மன் ராஜேந்திரன் திறந்து வைத்தார். மாவட்ட அறங்காவலலர் குழு தலைவர், நகர செயலாளர் மெடிக்கல் முரளி, துறையூர் ஒன்றிய செயலாளர்கள் அண்ணாதுரை, சிவ சரவணன், வீரபத்திரன், தலைமை பொதுக்குழு கிட்டப்பா, பூபதி, நகர மன்ற தலைவர் செல்வராணி , ஒன்றியக்குழு தலைவர் சரண்யா , மாவட்ட ஆதிதிராவிட நலக்குழு அமைப்பாளர் கஸ்டம்ஸ் மகாலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட பிரதிநிதி கார்த்திகேயன், அரசு வழக்கறிஞர் ஜெயராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு நீர்மோர் , தண்ணீர் வழங்கினர். நிகழ்ச்சியில் உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

The post துறையூர் பஸ்நிலையம் அருகே திமுக சார்பில் கோடைகால தண்ணீர் பந்தல் திறப்பு appeared first on Dinakaran.

Related Stories: