வேட்டை கொருமகன் கோயில் கும்பாபிஷேகம்

 

பாலக்காடு: பாலக்காடு அருகே கல்பாத்தி வேட்டை கொருமகன் அக்ரஹாரத்தில் அமைந்துள்ள வேட்டை கொருமகன் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கடந்த 23ம் தேதி முதல் யாகசாலை பூஜைகள், விசேஷ பூஜைகள் மற்றும் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதனை தொடர்ந்து நேற்று சிறப்பு கணபதிஹோமம், நித்யபூஜைகள், யாகசாலை புண்ணியாகம், பஞ்சாகினி ஹோமம், அந்தஹோமம், பூர்ணஹூதி, அக்னிகும்பமாமாரோஹணம், யாத்திராதானம், முகூர்த்ததானம், கோதானம், வேதப்பாராயணம் நிறைவு, தீபாராதணை, விமான கலசாபிஷேகம் ஆகியவை பிரம்மஸ்ரீ நெல்லிச்சேரி ஸ்ரீனிவாச பட்டாச்சாரியார் தலைமையில் நடந்தது.

இதனை தொடர்ந்து மஹா கும்பாபிஷேகம் விமர்சையாக நடைபெற்றது. இதில் திரளாக பக்தர்கள் கலந்து கொண்டு சாமியை வழிபட்டு சென்றனர். தொடர்ந்து தசதர்சனம், மகா தீபாராதணை, ஆசிர்வாதம் அன்னதானம் ஆகியவை நடைபெற்றது. இதனையடுத்து மாலை 6 மணியளவில் உற்சவர் அலங்கரித்த 3 யானைகள் மீது பஞ்சவாத்யங்கள் மூழங்க வீதியுலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

The post வேட்டை கொருமகன் கோயில் கும்பாபிஷேகம் appeared first on Dinakaran.

Related Stories: