பந்தலூர் அருகே சாலையை சீரமைக்க கோரிக்கை

 

பந்தலூர், ஜூன் 18: பந்தலூர் அருகே மழவன்சேரம்பாடி பகுதியில் கிடப்பில் போடப்பட்டுள்ள தார்சாலையை சீரமைக்க அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். நீலகிரி மாவட்டம் பந்தலூரில் இருந்து கொளப்பள்ளி வழியாக அய்யன்கொல்லி மற்றும் கேரளா மாநிலம் வயநாடு பகுதிக்கு செல்லும் நெடுஞ்சாலை கடந்த நான்கு மாதங்களுக்கு முன் நெடுஞ்சாலை துறை சார்பில் டெண்டர் விட பட்டு தார்சாலை சீரமைக்கும் பணி நடைபெற்றது. இந்த, சாலையின் ஒரு பகுதியான மழவன்சேரம்பாடி ரெட்டவங்கி பகுதியில் இருந்து மழவன்சேரம்பாடி வரையுள்ள சுமார் 200 மீட்டர் தூரமுள்ள தார் சாலை சீரமைக்காமல் கிடப்பில் போடப்பட்டுள்ளதால் வாகன ஓட்டிகள் பொதுமக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், குண்டும் குழியுமாக இருக்கும் தார்சாலையை உடனடியாக சீரமைக்கவேண்டும் என அப்பகுதி கவுன்சிலர் கோபாலகிருஷ்ணன் நெடுஞ்சாலை துறை உயர் அதிகாரிகளுக்கு புகார் தெரிவித்தும் பலமுறை நினைவூட்டல் செய்தும் இது வரை நடவடிக்கை எடுக்காததால் பொது மக்கள் மத்தியில் கடும் அதிருப்தி ஏற்பட்டுள்ளது. எனவே, மாவட்ட நிர்வாகம் மற்றும் நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் உரிய ஆய்வு செய்து கிடப்பில் போடப்பட்டுள்ள தார்சாலை பணியை உடனடியாக செய்து முடிக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post பந்தலூர் அருகே சாலையை சீரமைக்க கோரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: