ஊட்டி வேலை வாய்ப்பு அலுவலகத்தில் நாளை தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

ஊட்டி, ஜூன் 20: ஊட்டியில் நாளை 21ம் தேதி தனியார் வேலை வாய்ப்பு முகாம் நடக்கிறது. நீலகிரி, மாவட்ட கலெக்டர் அருணா கூறியிருப்பதாவது: நீலகிரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மூலமாக, தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் ஒவ்வொரு மாதமும் 3வது வெள்ளிக்கிழமைகளில் நடத்தப்பட்டு வருகிறது. இம்மாதத்திற்கான தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம், வரும் 21ம் தேதி வெள்ளிக்கிழமை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், கூடுதல் ஆட்சியர் வளாகம், பிங்கர்போஸ்ட், ஊட்டியில் நடத்தப்படவுள்ளது. இம்முகாமில், பல்வேறு பணிக்காலியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்ய முன்னணி தனியார்துறை நிறுவனங்களை சேர்ந்தவர்கள் கலந்து கொள்ள உள்ளனர். இம்முகாமில், 8ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு தேர்ச்சி, பட்டதாரிகள், பட்டயப்படிப்பு படித்தவர்கள், ஐடிஐ, கணினி இயக்குபவர்கள், ஓட்டுநர்கள் என அனைத்து விதமான தகுதியாளர்களும் கலந்து கொள்ளலாம்.

இம்முகாமில், கலந்து கொள்ள அனுமதி இலவசம். எனவே, நீலகிரி மாவட்டத்தில் தனியார் துறையில் பணிபுரிய ஆர்வமாக உள்ள அனைவரும் இந்த வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொண்டு பயனடையுமாறும், இம்முகாமின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டு தனியார்துறையில் பணியமர்த்தம் செய்யப்படும் வேலை நாடுநர்களின் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு இரத்து செய்யப்பட மாட்டாது. வேலை நாடுநர்கள் tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்து கொள்ள வேண்டும். மேலும், விவரங்களுக்கு ஊட்டியில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தினை நேரில் அல்லது தொலைபேசி எண்கள்; 0423-2444004, 7200019666 வாயிலாக தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு கூறியுள்ளார்.

The post ஊட்டி வேலை வாய்ப்பு அலுவலகத்தில் நாளை தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் appeared first on Dinakaran.

Related Stories: