பொன்னமராவதியில் உலக மலேரியா தின விழிப்புணர்வு முகாம்

 

பொன்னமராவதி,ஏப்.26: பொன்னமராவதி, மேலைச்சிவபுரியில் உலக மலேரியா தின விழிப்புணர்வு முகாம் நடந்தது. உலக மலேரியா எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு மேலைச்சிவபுரி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பாக அங்குள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியர் ஆர்த்தி தலைமையில் மாணவ, மாணவிகளுக்கு மலேரியா காய்ச்சல் உருவாக்கும் கொசு கிருமியான ஓட்டுண்ணி அறிகுறிகள் ரத்த தடவல் வழி உறுதிப்படுத்துதல் சிகிச்சை முறைகள் தடுக்கும் வழி வகைகள் குறித்து சுகாதார ஆய்வாளர் உத்தமன் விளக்கினார்.

மேலும் வினாக்கள் கேட்கப்பட்டு மாணவருக்கு பேனா பரிசளிக்கப்பட்டது. மேலும் அனைவரும் மலேரியா உறுதி மொழியேற்றனர். ஆசிரியர்கள் மற்றும் சுகாதார ஆய்வாளர் பிரேம்குமார் கலந்து கொண்டனர். இதே போல பொன்னமராவதி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவ அலுவலர் சிவகலை தலைமையில் சுகாதார ஆய்வாளர் தியாகராஜன் மற்றும் சுகாதாப்பணியாளர்கள், சுகாதார செவிலியர்கள், அலுவலர்கள் பங்குபெற்று உறுதி மொழி எடுக்கப்பட்டது.

The post பொன்னமராவதியில் உலக மலேரியா தின விழிப்புணர்வு முகாம் appeared first on Dinakaran.

Related Stories: