ஐபிஎல் 2023: ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் 145 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது டெல்லி அணி

ஐதராபாத்: 16-வது ஐபிஎல் தொடரில் 34-வது லீக் ஆட்டம் இன்று மாலை தொடங்கியது. ஐடன் மார்க்ராம் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி, டேவிட் வார்னர் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியுடன் மோதி வருகிறது. இதில் டாஸ் வென்ற டெல்லி கேப்பிட்டல் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார்.

இதையடுத்து தொடக்க வீரராக களமிறங்கிய கேப்டன் வார்னர் 21 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான பில் சால்ட் றன் எதுவும் எடுக்காமல் அவுட் ஆகி அதிர்ச்சியளித்தார். மிட்செல் மார்ஷ் 25 ரன்கள் எடுத்திருந்த நிலையில், ஆட்டமிழக்க, பொறுப்பாக ஆடிய மணீஷ் பாண்டே மற்றும் அக்ஷர் படேல் தலா 34 ரன்கள் எடுத்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.

அடுத்தடுத்து களமிறங்கிய வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட்டாகினர். இதையடுத்து 20 ஓவர்கள் முடிவில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 144 ரன்கள் எடுத்தது. இந்த நிலையில் 145 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணி பேட்டிங் செய்து வருகிறது. ஐதராபாத் அணி சார்பில் வாஷிங்டன் சுந்தர் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார். மேலும் புவனேஸ்வர் குமார் 2 விக்கெட்டுகளும் நடராஜன் 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.

The post ஐபிஎல் 2023: ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் 145 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது டெல்லி அணி appeared first on Dinakaran.

Related Stories: