அச்சிறுப்பாக்கம் சிவசுப்பிரமணிய சுவாமி கோயிலில் திருப்படி விழா

மதுராந்தகம்: செங்கல்பட்டு மாவட்டம் அச்சிறுப்பாக்கம் அடுத்த பெரும்பேர் கண்டிகை கிராமத்தில் 247 படிகளை கொண்டு மலை மீது பாண்டிய மன்னனால் கட்டப்பட்ட பிரசித்தி பெற்ற பழமையான சிவசுப்பிரமணிய சுவாமி கோயில் உள்ளது. இங்கு 65 வது ஆண்டு படிவிழா நேற்று காலை 5 மணிக்கு மங்கல இசையுடன் துவங்கியது. 6 மணி அளவில் சிவசுப்பிரமணிய சுவாமி, வள்ளி, தெய்வானை ஆகியோருக்கு பால், தயிர், தேன், மஞ்சள், விபூதி ஆகியவற்றால் அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது. காலை 7 மணி அளவில் கோமாதா பூஜையும் சேவற்கொடி உயர்த்துதல் நடைபெற்றன. காலை 8 மணி அளவில் படி பூஜை மற்றும் படி விழா நடைபெற்றது.

இதில் தொழுப்பேடு அன்பர் கூட்ட பாலா பக்த பஜனை குழுவினர் மற்றும் சிறு பெயர் பாண்டி பஜனை குழுவினர் திருப்புகழ் இசை பாடியபடி படிகளுக்கு பூஜை செய்து படி ஏறினர். இதைத் தொடர்ந்து 11 மணியளவில் பக்தி இசை நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவில், அச்சிறுப்பாக்கம், மதுராந்தகம், தொழுப்பேடு, ஒரத்தி, கடமலைப்புத்தூர் மற்றும் பெரும்பேர் கண்டிகை உள்ளிட்ட கிராமங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர். பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

The post அச்சிறுப்பாக்கம் சிவசுப்பிரமணிய சுவாமி கோயிலில் திருப்படி விழா appeared first on Dinakaran.

Related Stories: