ஏப்ரல் 25 முதல் கேதார்நாத் யாத்திரை: நாள்தோறும் 13,000 பக்தர்கள் தரிசிக்க ஏற்பாடு

ருத்ரபிரயாக்: உத்தரகாண்டின் கேதார்நாத் புனித யாத்திரை வரும் 25ம் தேதி முதல் தொடங்க உள்ளது.உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள 4 புனித தலங்களில் யமுனோத்ரி மற்றும் கங்கோத்ரி ஆகியவை உத்தரகாசி மாவட்டத்திலும், கேதார்நாத் ருத்ரபிரயாக் மாவட்டத்திலும், பத்ரிநாத் சமோலி மாவட்டத்திலும் உள்ளன. பக்தர்களுக்கான கேதார்நாத் யாத்திரை ஏப்ரல் 25ம் தேதி முதல் தொடங்கப்பட உள்ளது. இதனையொட்டி, பக்தர்களுக்கான பல்வேறு ஏற்பாடுகளை கேதார்நாத் கோயில் நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது. யாத்திரை வரும் பக்தர்களின் உடல் நலத்தை பரிசோதிக்க 22 மருத்துவர்கள் மற்றும் மருந்தாளுநர்களும் இருப்பார்கள். மேலும், வழி நெடுகிலும் 12 மருத்துவ முகாம்களும் அமைக்கப்பட்டுள்ளன. அவற்றில் மொத்தம் 6 ஆம்புலன்ஸ்கள் நிறுத்தப்பட்டிருக்கும். 2,500 பக்தர்கள் தங்குவதற்கு கார்வால் மண்டல விருந்தினர் மாளிகை, கேதார்நாத் தாமில் 1,600 பேர் தங்குவதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நாளொன்றுக்கு 13,000 பக்தர்கள் கேதார்நாத் கோயிலில் சாமி தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

The post ஏப்ரல் 25 முதல் கேதார்நாத் யாத்திரை: நாள்தோறும் 13,000 பக்தர்கள் தரிசிக்க ஏற்பாடு appeared first on Dinakaran.

Related Stories: