சிறுதானிய ஆண்டாக ஐ.நா. அறிவிப்பு: அமைச்சர் கண்ணப்பன் தகவல்

சென்னை: ஐநா சபை இந்த ஆண்டி சிறுதாணிய ஆண்டாக அறிவித்துள்ளது என்று அமைச்சர் ராஜகண்ணப்பன் கூறினார். காதி என்றாலே பாரம்பரியம் ஆகும். எனவே பாரம்பரிய அரிசி வகைகள், மரச்செக்கு எண்ணெய் மற்றும் சிறுதானிய வகைகளை மக்களுக்கு கொண்டு செல்வது கதர் வாரியத்தின் கடமையாகும். அதன் அடிப்படையில் மாப்பிள்ளை சம்பா, இரத்தசாலி, தூயமல்லி, சீரக சம்பா, கருப்பு கவுனி மற்றும் பூங்கார் போன்ற அரிசி வகைகள் “காதி பாரம்பரியம்“ எனும் பெயரிலும், மரச்செக்கு கடலெண்ணெய், நல்லெண்ணெய் ஆகியவைகளை கதர் வாரியம் விற்பனைக்கு அறிமுகம் செய்து உள்ளது. மேலும், இவ்வாண்டை சிறுதானிய ஆண்டாக ஐ.நா சபை அறிவித்துள்ளது.

ஆனால், கதர் வாரியம், சென்ற ஆண்டே தினை, சாமை, வரகு, கேழ்வரகு, குதிரை வாலி போன்ற சிறுதானியங்களையும், மூங்கில் அரிசியையும் விற்பனைக்கு அறிமுகம் செய்து உள்ளது. பனை தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்திடும் வகையில் பொது விநியோக திட்ட கடைகளில் பனை வெல்லம் விற்பனை செய்யப்படும் என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதைத்தொடர்ந்து, தமிழ்நாடு முழுவதும் ‘கற்பகம்’ என்ற பெயரில், ரூ.490.19 லட்சம் மதிப்பிலான 124 மெட்ரிக் டன் பனை வெல்லம் பொது விநியோக திட்டத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. அதைப்போல, கடந்த நிதியாண்டில் பதநீர் இறக்குபவர்களிடமிருந்து 1.42 லட்சம் லிட்டர் பதநீரை கொள்முதல் செய்து ரூ.104.8 லட்சத்திற்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் ராஜ கண்ணப்பன் தெரிவித்தார்.

The post சிறுதானிய ஆண்டாக ஐ.நா. அறிவிப்பு: அமைச்சர் கண்ணப்பன் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: