கோஹ்லி, டு பிளெஸ்ஸி, மேக்ஸி அதிரடி: ஆர்சிபி அபார ரன் குவிப்பு

பெங்களூரு: லக்னோ சூப்பர் ஜயன்ட்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் விராத் கோஹ்லி, டு பிளெஸ்ஸி, மேக்ஸ்வெல் ஆகியோரின் அதிரடி ஆட்டத்தால் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி அபாரமாக ரன் குவித்தது. எம்.சின்னசாமி ஸ்டேடியத்தில் நேற்று இரவு நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற லக்னோ அணி கேப்டன் கே.எல்.ராகுல் முதலில் பந்துவீச முடிவு செய்தார். கோஹ்லி – கேப்டன் டு பிளெஸ்ஸி இணைந்து ஆர்சிபி இன்னிங்சை தொடங்கினர். டு பிளெஸ்ஸி பொறுப்புடன் கம்பெனி கொடுக்க, அதிரடியாக விளையாடிய கோஹ்லி 35 பந்தில் அரை சதம் அடித்தார்.

இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 96 ரன் சேர்த்து வலுவான அடித்தளம் அமைத்தது. கோஹ்லி 61 ரன் (44 பந்து, 4 பவுண்டரி, 4 சிக்சர்) விளாசி அமித் மிஷ்ரா சுழலில் ஸ்டாய்னிஸ் வசம் பிடிபட்டார். அடுத்து டு பிளெஸ்ஸி – மேக்ஸ்வெல் இணைந்து அதிரடியை தொடர, பெங்களூரு அணி ஸ்கோர் மளமளவென உயர்ந்தது. டு பிளெஸ்ஸி 35 பந்திலும், மேக்ஸ்வெல் 24 பந்திலும் அரை சதம் விளாசினர். இருவரும் 2வது விக்கெட்டுக்கு 50 பந்தில் 115 ரன் சேர்த்தனர்.

மேக்ஸ்வெல் 59 ரன் விளாசி (29 பந்து, 3 பவுண்டரி, 6 சிக்சர்) மார்க் வுட் வேகத்தில் கிளீன் போல்டானார். ராயல் சேலஞ்சர்ஸ் 20 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 212 ரன் குவித்தது. டு பிளெஸ்ஸி 79 ரன் (46 பந்து, 5 பவுண்டரி, 5 சிக்சர்), தினேஷ் கார்த்திக் 1 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். இதைத் தொடர்ந்து, 20 ஓவரில் 213 ரன் எடுத்தால் வெற்றி என்ற மிகக் கடினமான இலக்குடன் லக்னோ சூப்பர் ஜயன்ட்ஸ் களமிறங்கியது.

The post கோஹ்லி, டு பிளெஸ்ஸி, மேக்ஸி அதிரடி: ஆர்சிபி அபார ரன் குவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: