காலிறுதியில் சிந்து, அஷ்மிதா

கோலாலம்பூர்: மலேசியா மாஸ்டர்ஸ் பேட்மின்டன் போட்டி கோலாலம்பூரில் நடக்கிறது. அதில் 2வது சுற்று ஆட்டங்கள் நேற்று நடந்தன.பெண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை பி.வி.சிந்து, கொரியாவின் சிம் யூ ஜின் ஆகியோர் மோதினர். அதில் சிந்து 21-13, 12-21, 21-14 என்ற செட்களில் வெற்றிப் பெற்று காலிறுதிக்கு முன்னேறினார். இந்த ஆட்டம் 59நிமிடங்கள் நீடித்தது.

மற்றொரு இந்திய வீராங்கனை அஷ்மிதா சாலிஹா(24வயது, 53வது ரேங்க்), முன்னணி வீராங்கனை அமெரிக்காவின் பெய்வென் ஜாங்(33வது, 10வது ரேங்க்) உடன் மோதினார். பொறுப்புடன் விளையாடிய அஷ்மிதா 43நிமிடங்களில் பெய்வென் சவால்களை முறியடித்தார். அதனால் 21-19, 16-21, 21-12 என்ற செட்களில் வென்று 2வது இந்திய வீராங்கனையாக காலிறுதிக்குள் நுழைந்தார்.

இன்று நடைபெறும் காலிறுதியில் இருவரும் தங்களை விட தரவரிசையில் முன்னணியில் இருக்கும் சீன வீராங்கனைகளுடன் மோதுகின்றனர். சிந்து முதலில் ஹான் யூயி உடனும், அஷ்மிதா தொடர்ந்து யின் மன் ஜாங் உடனும் விளையாட உள்ளனர். மற்ற பிரிவுகளில் களமிறங்கிய இந்திய வீரர்கள், வீராங்கனைகள் நேற்று 2வது சுற்றுடன் தோற்று வெளியேறினர்.

The post காலிறுதியில் சிந்து, அஷ்மிதா appeared first on Dinakaran.

Related Stories: