பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் இன்று கோலாகல தொடக்கம்

பாரிஸ்: பிரெஞ்ச் ஓபன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடர் பிரான்ஸ் தலைநகர் பாரிசில் இன்று கோலாகலமாகத் தொடங்குகிறது. டென்னிஸ் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் இந்த தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் மகத்தான சாதனையாளர்களான ரபேல் நடால் (ஸ்பெயின்), நோவாக் ஜோகோவிச் (செர்பியா) இருவரும் இளம் வீரர்களின் சவாலை எதிர்கொள்கின்றனர். இருவரும் ஒரே பாதியில் இடம் பெற்றுள்ளதால் அரையிறுதியில் சந்திப்பதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது.

யானிக் சின்னர் (இத்தாலி), கார்லோஸ் அல்கராஸ் (ஸ்பெயின்), அலெக்சாண்டர் ஸ்வெரவ் (ஜெர்மனி), டேனியல் மெட்வதேவ், ஆந்த்ரே ருப்லேவ் (ரஷ்யா), கேஸ்பர் ரூட் (நார்வே), ஹூபர்ட் ஹர்காக்ஸ் (போலந்து), ஸ்டெபனோஸ் சிட்சிபாஸ் (கிரீஸ்) ஆகியோரும் பட்டம் வெல்லும் முனைப்புடன் வரிந்துகட்டுகின்றனர். மகளிர் ஒற்றையர் பிரிவில் நம்பர் 1 வீராங்கனை இகா ஸ்வியாடெக் (போலந்து), அரினா சபலென்கா (பெலாரஸ்), கோகோ காஃப் (அமெரிக்கா), எலனா ரைபாகினா (கஜகஸ்தான்), மர்கெடா வோண்ட்ருசோவா (செக்.), மரியா சாக்கரி (கிரீஸ்), கின்வென் ஸெங் (சீனா), ஆன்ஸ் ஜெபர் (துனிசியா), ஜெலனா ஓஸ்டபென்கோ (லாத்வியா) ஆகியோரிடையே பட்டம் வெல்ல கடும் போட்டி நிலவுகிறது. ஆண்கள் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ரோகன் போபண்ணா – மேத்யூ எப்டன் (ஆஸி.) இணை பட்டம் வெல்லுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

The post பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் இன்று கோலாகல தொடக்கம் appeared first on Dinakaran.

Related Stories: