மானிய கோரிக்கை மீதான விவாதம் உதயநிதி ஸ்டாலின் இன்று பதில்

சென்னை: தமிழக சட்டப்பேரவையில் இன்று இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை, சிறப்பு திட்ட செயலாக்க துறை, கைத்தறி மற்றும் துணிநூல் துறை ஆகிய மானிய கோரிக்கை மீதான விவாதங்கள் நடைபெறும். இதில் உறுப்பினர்கள் பேச்சுக்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி ஆகியோர் பதில் அளிப்பார்கள். புதிய அறிவிப்புகளையும் வெளியிடுவார்கள். உதயநிதி ஸ்டாலின் அமைச்சரான பிறகு முதன் முறையாக தனது துறை சார்ந்த மானிய கோரிக்கை மீதான விவாதத்துக்கு பதில் அளித்து பேச உள்ளது குறிப்பிடத்தக்கது.

The post மானிய கோரிக்கை மீதான விவாதம் உதயநிதி ஸ்டாலின் இன்று பதில் appeared first on Dinakaran.

Related Stories: