குமரி அரசு மருத்துவமனைகொரோனா வார்டில் 2 பேருக்கு சிகிச்சை

நாகர்கோவில், ஏப்.7: ஆசாரிபள்ளம் குமரி மருத்துவ கல்லூரி கொரோனா வார்டில் 2பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குமரியில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. கடந்த 4ம் தேதி 49 பேராக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்தது. இதனையடுத்து அரசு மருத்துவமனைக்கு வருபவர்கள் அனைவரும் கட்டாயமாக முககவசம் அணிய உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் காய்ச்சல் முகாம்கள் நடத்தப்பட்டு, காய்ச்சல் இருக்கும் பகுதிகள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. ஆசாரிபள்ளம் மருத்துவ கல்லூரியில் கொரோனா தனிமைப்படுத்தல் வார்டுகள் திறக்கப்பட்டுள்ளன. ஆக்சிஜன் சிலிண்டர்கள் போதுமான அளவு இருப்பு வைக்கப்பட்டுள்ளன. தற்போது, கொரோனா பாதிப்பு உடையவர்கள் வீட்டு தனிமையில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இந்நிலையில், ஆசாரிபள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில், கொரோனா பாதிப்பு காரணமாக 3 பேர் தனிமை வார்டில் அனுமதிக்கப்பட்டனர். இதில் ஒருவர் டிஸ்சார்ஜ் ஆன நிலையில், 2 பேர் தொடர்ந்து சிகிச்சையில் இருந்து வருகின்றனர். இதுகுறித்து கல்லூரி முதல்வர் பிரின்ஸ் பயசிடம் கேட்டபோது, கொரோனா வார்டில் சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டுள்ள இருவரும் நல்ல நிலையில் இருப்பதாக தெரிவித்தார்.

The post குமரி அரசு மருத்துவமனை

கொரோனா வார்டில் 2 பேருக்கு சிகிச்சை appeared first on Dinakaran.

Related Stories: