சில்லைமரத்துப்பட்டியில் 58 ஆண்டு பழமையான நிழற்குடை அகற்றம்

போடி, மார்ச் 28: சில்லைமரத்துப்பட்டியில் 58 ஆண்டுகள் பழமையான நிழற்குடையை இடித்து அகற்றப்பட்டது. போடி தேவாரம் சாலை யில் சில்லைமரத்துப்பட்டி கிராம ஊராட்சி உள்ளது, இங்குள்ள பொதுமக்கள் போடி மற்றும் தேவாரம் பகுதிக்கு செல்வதற்கும் பஸ் வரும் வரை காத்திருப்பதற்கும் கடந்த 1965 ஆம் ஆண்டு பயணிகள் நிழற் குடை அமைக்கப்பட்டது. தொடர்ந்து 58 ஆண்டுகள் நெருங்கி விட்டதால் பயணிகள் நிழற்குடை சுவர்கள் மேற் கூரையும் உட்பட பழுதாகி விட்டதா லும் புதிய நவீன பயணிகள் நிழற்குடை அமைத்து தர வேண்டும் என பொது மக் கள் கோரிக்கை வைத்து வந்தனர்.

இந்நிலையில் போடி ஊராட்சி ஒன்றிய கிராமங்களில் உள்ள பஸ் நிலைய நிழற்குடைகள் 50 வருடங்களை கடந்துள்ள கட்டிடங்களை கணக்கெடுக்கும் பணி துவக்கப்பட்டுள்ளது.இதில் முதல் கட்டமாக சில்லைமரத்துப்பட்டி மெயின் ரோட்டில் பஸ் நிலையம் என்று சொல்லப்படுகிற பயணிகள் நிழ ற்குடை 58 வருடங்கள் என கடந்து விட்டதால் பொதுமக்களின் நலன் கருதி அந்த பயணிகள் நிழற்குடை இடிக்கப்பட்டது. மேலும் புதிய பயணிகள் நிழற்குடை கட்டுவதற்கான பணிகளும் நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories: