விவசாயம் செழிக்க வேண்டி சவுபாக்கிய துர்க்கை அம்மன் கோவிலில் சிறப்பு பூஜை

தேவகோட்டை, மார்ச் 28:தேவகோட்டை நித்தியகல்யாணிபுரம் சவுபாக்கிய துர்க்கை அம்மன் கோவிலில் அமைந்திருக்கும் பாகம்பிரியாள் சமேத திருக்கயிலேஸ்வரர் கோயிலில் ஏகாதச ருத்ர ஹோம ஜெப பூஜை நடைபெற்றது. நவநீதகிரி சிவாச்சாரியார், ரமேஷ் சிவாச்சாரியார் ஏற்பாடுகள் செய்திருந்தனர். நாடு சுபிட்சமாக இருக்க விவசாயம் செழிக்க வேண்டி ஹோமங்கள் நடைபெற்றது. சிறப்பு வேள்வி, ஹோமம் நடத்தினர். கோ பூஜையை தொடர்ந்து திருக்கயிலேஸ்வரர், பாகம்பிரியாளுக்கு சிறப்பு அபிேஷகம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

Related Stories: