சாத்தூர்: சாத்தூர் ரயில் நிலையத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த ரயில்வே போலீசார் மூன்றாவது நடை மேடையில் பாதுகாப்பு பணியில் இருந்தனர். அப்போது வடக்கு பகுதியில் உள்ள பயணிகள் உட்கார்ந்து இருக்க போடப்பட்டுள்ள பெஞ்ச் அருகே ஒருவர் படுத்து கிடந்துள்ளார். அங்கு சென்று பார்த்த போலீசார் அவரின் வாயில் இருந்து வெள்ளை நுரை தள்ளிய நிலையில் இருக்கவே 108 க்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் அங்கு வந்த 108 ஆம்புலன்ஸ் பணியாளர்கள் உடலை பரிசோதனை செய்ததில் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். பின்னர் தூத்துக்குடி ரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து இறந்த நபர் குறித்து விசாரித்து வருகின்றனர்.
