மக்கள் தொடர்பு திட்ட முகாமில் ரூ.20.49 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள்: கலெக்டர் ராகுல்நாத் வழங்கினார்

மாமல்லபுரம்: பெருமாளேரி கிராமத்தில் நடந்த, மக்கள் தொடர்பு திட்ட முகாமில் ரூ.20.49 லட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் ராகுல்நாத் வழங்கினார். மாமல்லபுரம் அடுத்த வடகடம்பாடி ஊராட்சி பெருமாளேரி கிராமத்தில், கிராமமக்கள் பயன்பெறும் வகையில் செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகம் சார்பில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் நேற்று நடந்தது. மாவட்ட வருவாய் அலுவலர் மேனுவல்ராஜ் முன்னிலை வகித்தார். மக்கள் தொடர்பு திட்ட முகாமில் செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் கலந்து கொண்டார்.

வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் முதலமைச்சரின் உழவர் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் விபத்து மரணம்டைந்த 2 பேர், இயற்கை மரணம் 31 பேர், சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் நலிந்தோர் உதவி தொகை 5, முதியோர் மற்றும் விதவை உதவித்தொகை 12, குடும்ப அட்டை 16, உட்பிரிவு பட்டா 14, இலவச வீட்டு மனை பட்டா 29,  மாற்றுத்திறனாளிகள் துறை சார்பில் மோட்டார் பொருந்திய தையல் இயந்திரம் 3, கூட்டுறவுத்துறை சார்பில் சிறு வணிகக்கடன் 4, சுய உதவிக்குழு கடன் ஒருவர், பயிர்க்கடன் 5 பேர் என மொத்தம் 122 பேருக்கு ரூ.20.49 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் ராகுல்நாத் வழங்கினார்.

மேலும், வேளாண்மை பொறியியல் துறை, தோட்டக்கலை துறை, வேளாண்மை துறை ஆகியவற்றின் சார்பில் ரூ.26,633 மதிப்பில் நெல் நடவு இயந்திரம், மிளகாய் மற்றும் கத்திரிச்செடி, தார்பாய், விசைத்தெளிப்பான், வேளாண் கருவிகள் தொகுப்பு ஆகியவைகளையும் கலெக்டர் வழங்கினார். இந்நிகழ்ச்சியில், கலெக்டர் ராகுல்நாத் பேசுகையில், அரசு நல திட்டங்கள் குறித்து சந்தேகம் இருந்தால் சம்பந்தப்பட்ட அலுவலர்களை நேரில் சந்தித்து பயன்பெறுங்கள்’ என்றார்.  இதில், சமூக பாதுகாப்பு திட்ட துணை ஆட்சியர் ஷாகிதாபர்வீன், மாவட்ட வழங்கல் அலுவலர் பேபி இந்திரா, திருக்கழுக்குன்றம் தாசில்தார் ராஜேஷ்வரி, சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் புஷ்பலதா, மண்டல துணை தாசில்தார் சையதுஅலி, மாமல்லபுரம் வருவாய் ஆய்வாளர் ரகு, வடகடம்பாடி ஊராட்சி தலைவர் பரசுராமன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: