ஏனாத்தூர் சங்கரா பல்கலையில் ஊழல் எதிர்ப்பு விழிப்புணர்வு

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தை அடுத்த ஏனாத்தூரில் உள்ள சங்கரா பல்கலைக்கழகத்தின் நாட்டு நலப்பணி திட்டம் சார்பாக, ஊழல் எதிர்ப்பு விழிப்புணர்வு திட்டம் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில், பல்கலைக்கழக பதிவாளர் சீனிவாசு தலைமை தாங்கினார். நாட்டு நலப்பணி திட்ட ஒருங்கிணைப்பாளர் நாகராஜன் வரவேற்றார். இந்நிகழ்ச்சியில், ஊழல் மற்றும் அதன் காரணம், விளைவுகள் பற்றியும் விரிவாக எடுத்துரைக்கப்பட்டது.

மேலும், போதைப்பொருள் தடுப்பு மற்றும் விழிப்புணர்வு பிரிவு அலுவலர் அண்ணாதுரை, எதிர்காலத்தில் ஊழலற்ற தமிழகத்தையும், இந்தியாவையும் உருவாக்க வேண்டியதன் அவசியம் குறித்தும், லஞ்சம் வாங்குவதும், கொடுப்பதும் குற்றம் என்று மாணவர்களுக்கு எடுத்துரைத்தார். இதில், தமிழக அரசின் விஜிலென்ஸ் துறையை சேர்ந்த காவல் துறையினர், பல்கலை கழக நாட்டு நலப்பணி திட்ட மாணவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். மேலும், அனைவரும் ஊழலுக்கு எதிரான உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் ராஜலட்சுமி செய்திருந்தார்.

Related Stories: