காஞ்சிபுரம் மாவட்டத்தில் கல்வி நிறுவன கட்டிடங்களுக்கு அனுமதி பெற கால அவகாசம் நீட்டிப்பு

காஞ்சிபுரம்: கல்வி நிறுவன கட்டிடங்களுக்கு அனுமதி பெற கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட கலெக்டர் ஆர்த்தி தெரிவித்துள்ளார்.  நகர் ஊரமைப்பு இயக்ககத்தின் எல்லைக்குள் அமையும் திட்டமில்லா பகுதிகளில் 1.1.2011க்கு முன்னர் கட்டப்பட்டு இயங்கிவரும் அனுமதியற்ற கல்வி நிறுவன கட்டிடங்களுக்கு இத்துறையால் அனுமதி வழங்கும் திட்டத்தின் வழிகாட்டு நெறிமுறைகள், வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை  சார்பில் வெளியிடப்பட்டன. பின்னர், இத்திட்டத்தின் கீழ் நிகழ்நிலை   ஆன்லைனில்  14.6.2018 முதல் 13.9.2018 வரை மூன்று மாத காலத்தில் பெறப்பட்ட விண்ணப்பங்களுக்கு அனுமதி வழங்குவதற்கு சென்னை உயர் நீதிமன்றத்தால் விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கிட மேல் முறையீட்டு மனுக்கள் மற்றும் பலவற்றில் வழங்கப்பட்டுள்ள 10.2.2021 தேத தீர்ப்பில் உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த நீதிமன்ற உத்தரவின்படி 22.03.2021 முதல் 04.04.2021 வரை இருவார காலத்திற்கு விண்ணப்பங்கள் பெறப்பட்டன. மீண்டும் இத்திட்டத்தின்கீழ் விண்ணப்பிக்கத் தவறியவர்களுக்கு ஒரு வாய்ப்பு வழங்கும் விதமாக விண்ணப்பம் சமர்ப்பிக்க மேலும் ஆறு மாத காலம் காலநீட்டிப்பு அரசால் 24.06.2022 முதல் 31.12.2022 வரை வழங்கப்பட்டது. தற்பொழுது இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க தவறியவர்களுக்கு மற்றுமொரு வாய்ப்பாக  30.06.2023 வரை விண்ணப்பிக்க காலநீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது. விண்ணப்பித்தவர்கள் உரிய விபரங்களை சமர்ப்பித்து அனுமதி பெற சம்பந்தப்பட்ட மாவட்ட நகர் ஊரமைப்பு அலுவலகங்களை அணுகலாம். இத்திட்டத்தின் கீழ்விண்ணப்பிக்க விரும்புவர்கள் https://tcp.tn.gov.in என்ற இணைய தளமுகவரியில் விண்ணப்பம் பதிவு செய்யலாம் என இதன்மூலம் தெரிவிக்கப்படுகின்றது. இது ஒருமுறை மட்டுமே வழங்கப்படும் அரிய வாய்ப்பு என்பதால் இதனை தவறாது பயன்படுத்திக்கொள்ளுமாறு என மாவட்ட கலெக்டர் ஆர்த்தி  தெரிவித்துள்ளார்.

Related Stories: