நாய்களுக்கு இனப்பெருக்க தடை ஊசி போட வேண்டும் அரியலூர் நகர்மன்ற கூட்டத்தில் வலியுறுத்தல்

அரியலூர், பிப்.21: அரியலூர் நகராட்சி அலுவலக கூட்டரங்கில், நகர் மன்ற உறுப்பினர்கள் குழு கூட்டம் நேற்று தலைவர் சாந்தி கலைவாணன் தலைமையில் நடந்தது. துணைத் தலைவர் தங்க கலியமூர்த்தி, நகராட்சி ஆணையர்(பொ) தமயந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டனர். நகராட்சி அலுவலர் செந்தில்குமார் தீர்மானங்களை வாசித்தார். அரியலூர் நகராட்சிக்கு எல்லைக்குட்பட்ட 18 வார்டு பகுதியிலும் உள்ள பொதுமக்கள் மற்றும் போக்குவரத்துக்கு இடையூறாகவும் அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் சுற்றித்திரியும் நாய்களை பிடித்து இனப்பெருக்க தடை அறுவை சிகிச்சை மற்றும் வெறிநாய் தடுப்பூசி செலுத்தவேண்டும் என்பது உள்ளிட்ட 17 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. ஒரு தீர்மானம் ஒத்திவைக்கப்பட்டும், ஒரு தீர்மானத்தின் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

Related Stories: