நெல்லை அருகே பள்ளத்தில் கார் கவிழ்ந்து டிரைவர் பரிதாப பலி

நெல்லை, செப். 29: நெல்லை அருகே அதிவேகமாக சென்ற கார் பள்ளத்தில் கவிழ்ந்ததில் டிரைவர் பரிதாபமாக இறந்தார். நெல்லை அடுத்த தேவர்குளம் அருகே வன்னிக்கோனேந்தல் பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்த பரமசிவன் மகன் கனகராஜ் (28). கார் டிரைவரான இவர், நேற்று முன்தினம் இரவு கழுகுமலைக்கு சவாரி சென்றுவிட்டு ஊருக்கு திரும்பிக்கொண்டிருந்தார். தேவர்குளம் அடுத்த கூவாச்சிபட்டி அருகே வந்தபோது இவரது கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடிய சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் காரின் இடிபாடுகளுக்குள் சிக்கி உயிருக்கு போராடிக் கொண்டிருந்த கனகராஜை, தகவலின் பேரில் விரைந்து சென்ற தேவர்குளம் போலீசார் மீட்டு நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். ஆனால், அங்கு அவர் சிறிது நேரத்தில் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் தேவர்குளம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

Related Stories: