கந்தர்வகோட்டை ஊராட்சி மருத்துவ நகருக்கு கழிவுநீர் வாய்கால் கட்டும் பணி துவக்கம்

கந்தர்வகோட்டை,செப்.28: புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஊராட்சியில் உள்ள மருத்துவர் நகர் பகுதிக்கு கழிவுநீர் வாய்க்கால் அமைக்க ஊராட்சி ஒன்றிய பொது நிதியிலிருந்து ரூ.7.30 லட்சம் மதிப்பீட்டில் கட்ட ஒன்றியக்குழு தலைவர் கார்த்திக் (எ) ரத்தினவேல் மழவராயர் தலைமையில் பூமிபூஜை நடைபெற்றது. நிகழ்ச்சியில் கந்தர்வகோட்டை ஊராட்சி மன்றத் தலைவர் தமிழ்செல்வி, ஒன்றியக்குழு துணை தலைவர் செந்தாமரை வடிவேல் குமார், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ராஜா, அரசு ஒப்பந்தகாரர் ஆனந்தகுமார், மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர். ஒன்றியக்குழு தலைவர் கூறும்போது பணியை விரைந்து முடிக்க வலியுறுத்தினார்.

Related Stories: