சித்திரை சுற்றுலா கலை விழா நிறைவு

மதுரை, ஏப். 27: மதுரை திருமலை நாயக்கர் மகாலில், தமிழ்நாடு அரசு சுற்றுலாத்துறையின் சார்பில் 5 நாட்கள் நடத்தப்பட்ட சித்திரை சுற்றுலா கலை விழா நேற்று முன் தினம் நிறைவடைந்தது. இந்த ஆண்டுக்கால கலை விழா கடந்த 21ம் தேதி மதுரை திருமலை நாயக்கர் மகாலில் துவங்கியது. நேற்று முன் தினம் வரை 5 நாட்களுக்கு இவ்விழா நடந்தது. தினமும் காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரை தமிழ்நாட்டின் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளான கரகம், ஒயிலாட்டம், சிலம்பாட்டம், தோற்பாவைக் கூத்து போன்ற கிராமிய கலை நிகழ்ச்சிகள் மற்றும் பரதநாட்டியம், வீணை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.

இவ்விழாவிற்கு பொதுமக்கள், வெளியூர், வெளிமாநில, வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் என பலரும் வந்திருந்து கண்டுகளித்தனர். நேற்று முன் தினம் மாலையுடன் இவ்விழா நிறைவடைந்தது. நிறைவுநாளன்று மதுரை கலாகேந்திரா கலை நிறுவனம் சார்பில் பரதநாட்டியம் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து பலதரப்பட்ட கிராமிய கலை நிகழ்ச்சிகளிலும் பல்வேறு அமைப்பினர், நடன கலைஞர்கள் பங்கேற்று தங்கள் திறன்களை வெளிக்கொணர்ந்து அசத்தினர். இதற்கான ஏற்பாடுகளை மதுரை சுற்றுலா அலுவலர் பாலமுருகன் செய்திருந்தார்.

The post சித்திரை சுற்றுலா கலை விழா நிறைவு appeared first on Dinakaran.

Related Stories: