மிரட்டல் வழக்கில் இருவர் கைது

குளத்தூர், ஆக. 12: வேம்பார் ரோஜாபாளையம் மேற்குத்தெருவை சேர்ந்தவர் அந்தோணி குரூஸ் மகன் மரியசெல்வம்(34), மீன்பிடித் தொழிலாளி. இவருக்கு அனிட்டாமேரி என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர். கடந்த 2017ம் ஆண்டு நடந்த கொலை வழக்கு விசாரணை, மரியசெல்வம் மீது நிலுவையில் உள்ளது. இந்நிலையில் முன்விரோதம் காரணமாக இவரது வீட்டு முன்பு வேம்பார் மேற்குத்தெருவை சேர்ந்த சங்கரலிங்கம் மகன் முத்துலிங்கம்(34) என்பவர் தீபாவளி வெடிகுண்டை வீசி மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து மரியசெல்வம் கொடுத்த புகாரின் பேரில் சூரங்குடி போலீசார், முத்துலிங்கத்தை கைது செய்தனர். இதேபோல் முத்துலிங்கம் உறவினர் காசிலிங்கம் மகன் தர்மராஜ்(34) என்பவர் கொடுத்த மிரட்டல் புகாரின் பேரில், மரியசெல்வத்தை போலீசார் கைது செய்தனர். விசாரணைக்கு பிறகு இருவரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Related Stories: