விகேபுரம் பகுதியில் இன்று மின்தடை

விகேபுரம், ஆக.11: விகேபுரம் பகுதிகளில் இன்று காலை 9 மணியிலிருந்து மதியம் 2 மணி வரை மின்தடை ஏற்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது. கல்லிடைக்குறிச்சி உபமின்நிலையத்தில் இன்று பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் மின்நிலையத்திற்கு உள்பட்ட விகேபுரம், பாபநாசம், சேர்வலாறு, காரையாறு, கோட்டைவிளைபட்டி, முதலியார்பட்டி, அடையகருங்குளம், சிவந்திபுரம், ஆறுமுகம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் இன்று காலை 9 மணியிலிருந்து மதியம் 2 மணி வரை மின்தடை செய்யப்பட உள்ளது. இத்தகவலை கல்லிடைக்குறிச்சி மின்வாரிய செயற்பொறியாளர் சுடலையாடும் பெருமாள் தெரிவித்துள்ளார்.

Related Stories: