ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க வேண்டும்

தூத்துக்குடி, ஆக.10:  தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்கவேண்டும் என கலெக்டரிடம் கிராம மக்கள் மனு அளித்து கோரிக்கை விடுத்துள்ளனர். இதுதொடர்பாக தூத்துக்குடி தெற்கு வீரபாண்டியபுரம் அருகேயுள்ள டி.குமாரகிரி கிராமத்தைச் சேர்ந்த கிருஷ்ணவேணி, சுடலி, ரவி மற்றும் பொதுமக்கள் கலெக்டரிடம் அளித்த கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது: எங்கள் கிராமத்திற்கு அருகே செயல்பட்டு வந்த ஸ்டெர்லைட் தொழிற்சாலை மூடப்பட்டுள்ளதால் படித்த இளைஞர்கள் மற்றும் படிக்காத தொழிலாளர்கள் பலரும் வேலை இல்லாத நிலைக்கு உள்ளாகியுள்ளனர். அத்துடன் கிராமப்புற மக்களான எங்களின் வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. வேலைவாய்ப்புகள் பெருகிடவும், ஆலையை சுற்றியுள்ள கிராமமக்களின் வாழ்வாதாரம் மேம்படவும் ஸ்டெர்லைட் தொழிற்சாலையை மீண்டும் திறக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.   இவ்வாறு அந்த மனுவில் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: