தேவதானப்பட்டியில் காங்கிரசார் நடை பயணம்

பெரியகுளம், ஆக. 10: பெரியகுளம் அருகே தேவதானப்பட்டியில் இருந்து மாவட்ட காங்கிரஸ் கட்சியினர் இந்தியாவின் 75வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு நேற்று பாதயாத்திரை நடை பயணத்தை மேற்கொண்டனர். இந்த பாத யாத்திரை பயணத்தை கட்சியின் முன்னாள் எம்பி ஜே.எம். ஹாரூண் ரஷீத் துவக்கி வைத்தார். இந்த நடை பயணமானது தேவதானப்பட்டியில் இருந்து துவங்கி சில்வார்பட்டி, ஜெயமங்கலம், மேல்மங்கலம், வடுகபட்டி, தாமரைக்குளம் வரை 10 கிலோமீட்டர் தூரம் செல்கிறது. இந்த நடை பயணத்தின் போது கிராமங்கள்தோறும் இந்தியா சுதந்திரம் அடைவதற்கு காங்கிரஸ் பேரியக்கம் ஆற்றிய தியாகங்கள், சுதந்திரம் அடைந்த பின் காங்கிரஸ் கட்சி இந்தியாவை எப்படி கட்டமைத்தது மற்றும் தற்போது மத்தியில் ஆளும் பாஜகவால் இந்தியா உலகளவில் பின்னடைவை சந்தித்து வருவது குறித்து விளக்கும் துண்டு பிரசுரங்களை பொதுமக்களிடம் வழங்கி விழிப்புணர்வு செய்தனர். இந்த நடை பயணத்தில் மாவட்ட காங்கிரஸ் தலைவர் முருகேசன், மாநில பொதுக்குழு உறுப்பினர் மைதீன் பிச்சை, மாவட்ட துணை தலைவர், மாவட்ட துணை தலைவர் ஜின்னா, மாவட்ட பொருளாளர் பாலசுப்பிரமணி மற்றும் வட்டார காங்கிரஸ் தலைவர்கள் ஹம்ஸ் முகமது, சுதாகர், ஜீவா, முருகன், ராஜா முகமது, தங்கம், சத்தியமூர்த்தி மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். முன்னதாக தேவதானப்பட்டியில் முன்னாள் எம்பி ஜே.எம். ஹாரூன் காங்கிரஸ் கட்சியின் கொடியை ஏற்றி வைத்தார்.

Related Stories: