இளைஞர் திறன் திருவிழா

கடலூர், ஜூலை 29: கடலூர் மாவட்ட ஆட்சியர் பாலசுப்ரமணியம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், 30ம் தேதி(நாளை) குறிஞ்சிப்பாடி அரசினர் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெறயிருந்த இளைஞர் திறன் திருவிழா நிர்வாக காரணங்களால் தேதி மாற்றம் செய்யப்பட்டு ஆகஸ்ட் மாதம் 5ம் தேதி காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை பண்ருட்டி மெயின் ரோடு, வடலூர் மங்கையர்கரசி திருமண மண்டபத்தில் நடைபெற உள்ளது. மகளிர் திட்டம் மூலம் கடலூர் மாவட்டத்தில் உள்ள கிராமபுறங்களை சேர்ந்த 18 முதல் 35 வயதுக்கு உட்பட்ட  இளைஞர்களுக்கு திறன் பயிற்சி அளிக்கும் திருவிழாவில் அரசு நிறுவனங்கள் மற்றும் தனியார் நிறுவனங்கள் பங்கேற்கவுள்ளார்கள். இந்த முகாமில் இளைஞர்கள் அதிக வேலை வாய்ப்புள்ள தொழில்களைப்பற்றி அறிந்து கொள்வதோடு திறன் மேம்பாடு குறித்த விழிப்புணர்வு மற்றும் தகவல்களையும் ஒருங்கிணைந்து பயன்பெற வழிவகை உள்ளதால் ஆண், பெண் இருபாலர்களும் கலந்து கொண்டு அவர்களது வாழ்க்கை தரத்தை உயர்த்தி கொள்ளுமாறு தெரிவிக்கப்படுகிறது. அதார் அட்டை மேலும்கூடுதல் தகவல்களுக்கு மகளிர் திட்ட அலுவலகம், பூமாலை வணிக வளாகம், கடலூர்- 607001 என்ற முகவரியில் நேரில் தொடர்பு கொள்ளலாம், என தெரிவித்துள்ளார்.

Related Stories: