கலைஞர் பிறந்த நாள் விழா

ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் ஒன்றியத்தில் உள்ள கள்ளிமந்தயம் ஊராட்சியில், முன்னாள் முதல்வர் கலைஞரின் 99வது பிறந்த நாள் விழா நடைபெற்றது. உணவுத்துறை அமைச்சர் அர.சக்கரபாணி தலைமை வகித்தார். இதையொட்டி பொதுமக்களுக்கு அமைச்சர் இனிப்பு வழங்கினார். தூய்மைப் பணியாளர்களுக்கு அரிசி மற்றும் மளிகை பொருட்களை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில், மாவட்ட துணைச் செயலாளர் இராஜாமணி, தொப்பம்பட்டி கிழக்கு ஒன்றியச் செயலாளர் தங்கராஜ், தொப்பம்பட்டி ஒன்றிய துணை பெருந்தலைவர் தங்கம், ஒன்றிய துணைச் செயலாளர் செல்வராஜ், ஊராட்சி மன்ற தலைவர் கணேசன், துணைத்தலைவர் ராஜேஷ்குமார், கிளைச்செயலாளர் கோதண்டராமன், திண்டுக்கல் மேற்கு மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் ஆனந்தராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Related Stories: