சின்னஓவுலாபுரத்தில் வேளாண் வளர்ச்சி திட்டம் துவக்கம்

சின்னமனூர், மே 25: சின்னமனூர் அருகே பூசாரிகவுண்டன்பட்டி என்ற சின்ன ஓவுலாபுரம் ஊராட்சியில் தமிழ்நாடு அரசு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சியின் மூலமாக திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சிக்கு ஒன்றிய தலைவர் நிவேதா அண்ணா துரை தலைமை வகிக்க, ஊராட்சி தலைவர் நாகம்மாள் செல்வம் முன்னிலை வகித்தார். உதவி வேளா ண்மை இயக்குனர் பாண்டி வரவேற்றார்.

விழாவில் தேர்வு செய்யப்பட்ட  விவசாயிகளுக்கு இடுபொருள்களையும், தலா 3 வீதம் 200 விவசாயிகளுக்கு  தென்னங்கன்றுகள், போர்வெல் அமைக்க 2 விவசாயிகளுக்கு உத்தரவின் நகல், சுற்றுசூழலை பாதுகாக்கும் 100 விவசாயிகளுக்கு மரக்கன்றுகள், மருந்து கலந்து பயிர்களுக்கு தெளிக்க 100 விவசாயிகளுக்கு பேரல் ட்ரம்கள், கைத்தெளிப்பான், பவர் தெளிப்பான்கள் வழங்கப்பட்டது. வேளாண்மை துணை இயக்குநர் சங்கர், தோட்டக்கலை உதவி இயக்குநர் கார்த்திக் ராஜா தோட்டக்கலைத்துறை திட்டங்கள் பற்றி கூறினர். வட்டார வளர்ச்சி அலுவலர் பாரதமணி, கால்நடை மருத்துவர் வினோத்குமார், உதவி செயற்பொறியாளர்கள் நவநீத பாண்டியன், திருஞானம், இளநிலை ஆய்வாளர் ராஜேஸ் கண்ணன் மற்றும் துறை அலுவலர்கள், விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர். உதவி வேளாண்மை அலுவலர் தங்க முத்து நன்றி கூறினார்.

Related Stories: