அரவை பணிக்காக நாகையில் இருந்து ஈரோடுக்கு 2000 மெ.டன் நெல் சென்றது

நாகை, ஜன.28: நாகை ரயில்வே ஸ்டேசனில் இருந்து சரக்கு ரயில் மூலம் 2 ஆயிரம் மெட்ரிக் டன் நெல் மூட்டைகள் அரவைக்காக ஈரோடு மாவட்டத்திற்கு சென்றது. நாகை மாவட்டத்தில் நடப்பாண்டில் 51 ஆயிரத்து 877 எக்டேரில் சம்பா, 13 ஆயிரத்து 120 எக்டேரில் தாளடி நெல் சாகுபடி பணிகளும் நடந்துள்ளது. அறுவடை பணிகள் முடிந்து அரசின் நேரடி கொள்முதல் நிலையங்கள் மூலம் நெல்மூட்டைகள் கொள்முதல் செய்யப்பட்டு சேமித்து வைக்கப்பட்டது. இந்நிலையில் நாகை மாவட்டத்தில் கொள்முதல் செய்த 2 ஆயிரம் மெட்ரிக் டன் நெல் மூட்டைகள் சரக்கு ரயில் மூலம் ஈரோட்டிற்கு அரவைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. முன்னதாக ஆங்காங்கே திறந்த வெளிக்கிடங்குகளில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த நெல் மூட்டைகள் லாரிகளில் ரயில் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டு ரயில் வேகன்களில் அனுப்பி வைக்கப்பட்டது.

Related Stories: