தேனி மாவட்ட திமுக சார்பில் மொழிப்போர் தியாகிகளுக்கு மரியாதை

தேனி:  தேனி மாவட்ட திமுக சார்பில் மொழிப்போர் தியாகிகளுக்கு  வீரவணக்க அஞ்சலி செலுத்தப்பட்டது. தேனி வடக்கு மாவட்ட திமுக சார்பில் மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்தும் நிகழ்ச்சி தேனியில் உள்ள திமுக கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு தேனி வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் தங்கதமிழ்செல்வன் தலைமை தாங்கி மொழிப்போர் தியாகிகள்   உருவப் படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். இந்நிகழ்ச்சியில் பெரியகுளம்  தொகுதி எம்எல்ஏ  சரவணகுமார் முன்னிலை வகித்தார். இதில், தேனி நகர தி.மு.க பொறுப்புக் குழு உறுப்பினர்கள்  பண்ணை ரவி, துரைராஜ், நகர வர்த்தக அணி அமைப்பாளர் தெய்வாபால்பாண்டி  உள்பட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: