ஆந்திராவில் தேர்தலை முன்னிட்டு 17 டாஸ்மாக் மது கடைகள் மூடல்

திருத்தணி, மே 11: ஆந்திர மாநிலத்தில் சட்டமன்றத் தேர்தல் மற்றும் நாடாளுமன்ற தேர்தல் வருகிற 13ம் தேதி நடைபெற உள்ளது. அதனால் ஆந்திர மாநில எல்லையை ஒட்டிய திருவள்ளூர் மாவட்டத்திற்கு உட்பட்ட ஐந்து கிலோ மீட்டர் தொலைவில் உள்ள 17 கடைகளை மூட தமிழ்நாடு மாநில வாணிப கழகம், மதுபான சில்லறை விற்பனை கடைகள் மற்றும் அதனுடன் இணைந்த மது கூடங்களை இன்று 11ம் தேதி இரவு 7 மணி முதல் 13ம் தேதி இரவு 7 மணி வரை மூட உத்தரவிட்டுள்ளது. அதன்படி திருத்தணி வட்டம், மத்தூர் கிராமம் (8710), (9088), எதுமதுரை கிராமம் (9106), கனகம்மா சத்திரம் (9107), கும்மிடிப்பூண்டி வட்டம், தூரப்பள்ளம் கிராமம் (9114), (9127) பல்லவாடா கிராமம் (9120), நேமலூர் கிராமம் (9123), செதில்பாக்கம் (9129) மேமலூர் பொம்மைஜி குளம் (8743), சுண்ணாம்பு புரம் (9054), எளாவூர் (9071) பள்ளிப்பட்டு வட்டம் கோரகுப்பம் (9018), அத்திமாஞ்சேரி பேட்டை (9021), சித்தூர் சாலை புதுப்பட்டு (9022), ஊத்துக்கோட்டை வட்டம், பெருஞ்சேரி கிராமம் (9070), ஆரம்பாக்கம் (9109) ஆகிய பகுதிகளில் உள்ள 17 கடைகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளதாக தமிழ்நாடு மாநில வாணிப கழகம் மாவட்ட மேலாளர் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியுள்ளார்.

The post ஆந்திராவில் தேர்தலை முன்னிட்டு 17 டாஸ்மாக் மது கடைகள் மூடல் appeared first on Dinakaran.

Related Stories: