இரவில் பஞ்சராகி நின்றது  லாரி; உதவி செய்ய வந்தவர் டூவீலர் மோதி பலி; திருவாடானை அருகே பரிதாபம்

திருவாடானை, ஜன. 22:  தொண்டியில் இருந்து காரைக்குடிக்கு குருடாயில் ஏற்றி கொண்டு லாரி ஒன்று நேற்று முன்தினம் இரவு திருச்சி- ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் வந்துள்ளது. திருவாடானை அருகேயுள்ள கோவணி கிராமம் பகுதியில் வந்த போது டயர் பஞ்சராகி லாரி நின்று விட்டது இதையடுத்து லாரியை ஓட்டி வந்த டிரைவர் சுந்தரம், அருகிலிருந்த வீட்டு உரிமையாளர் உடையப்பன் (57) என்பவரை டார்ச்லைட் எடுத்து கொண்டு வந்து உதவி செய்யும்படி கூறியுள்ளார். இதையடுத்து டார்ச் லைட்டை கையில் எடுத்து கொண்டு பஞ்சராகி நின்ற லாரி அருகே உடையப்பன் வந்துள்ளார். அப்போது அவ்வழியே டூவீலரில் வந்த அடையாளம் தெரியாத நபர் வேகமாக வந்து உடையப்பன் மீது மோதி உள்ளார். இதில் தலையில் பலத்த காயமடைந்த அவரை மீட்டு சிகிச்சைக்காக தேவகோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே உடையப்பன் பரிதாபமாக உயிரிழந்தார். விபத்து நடந்த இடத்தில் டூவீலரின் நம்பர் பிளேட் ஒன்று கிடந்துள்ளது. அதை கைப்பற்றி திருவாடானை போலீசார் விபத்தை ஏற்படுத்திய நபர் யார் என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories: