செய்யாறில் போக்குவரத்துக்கு இடையூறு: ஆக்கிரமிப்பு கடைகள் அதிரடியாக அகற்றம் போலீசார் அதிரடி

செய்யாறு, ஜன.8: செய்யாறில் போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த கடைகளை டிராபிக் போலீசார் அதிரடியாக அகற்றியதால் பொதுமக்கள் பெரிதும் பாராட்டினார்கள்.  செய்யாறு நகரில் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியை நகராட்சி பணியாளர்கள் மற்றும் டிராபிக் போலீசார் மேற்கொண்டனர். இதில் சாலையோரத்தில் உள்ள காய்கறி, பழம், பூ கடைகள், தள்ளுவண்டிகள் உள்ளிட்ட ஆக்கிரமிப்பு கடைகள், பஸ் ஸ்டாண்ட், ராஜாஜி பூங்கா, காந்தி சாலை, லோகநாதன் தெரு சந்திப்பு உள்ளிட்ட பகுதிகளில் செயல்பட்டு வந்தது. அதனை போக்குவரத்து இன்ஸ்பெக்டர் லோகநாதன், சப்- இன்ஸ்பெக்டர் சேகர் மற்றும் போக்குவரத்து போலீசார் உதவியுடன் பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும், சாலை ஓரங்களில் அனுமதியின்றி வைக்கப்பட்டிருந்த டிஜிட்டல் போர்டு, தள்ளு வண்டி கடைகளை நகராட்சி வாகனங்களில் ஏற்றி நகராட்சிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் முகக்கவசம் அணியாத நபர்களுக்கு அபராதம் விதித்தனர். பொங்கல் பண்டிகை நெருங்குவதால் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தவும், கொரோனா தடுப்பு நடவடிக்கையாக பொதுமக்கள் நெருக்கமாக செல்வதை தவிர்க்கும் பொருட்டு சாலையோர ஆக்கிரமிப்புக்களை அகற்றியதை பொதுமக்கள் பெரிதும் பாராட்டினர்.

Related Stories: