4560 அடி உயரமுள்ள பர்வத மலையில் இன்று சித்ரா பவுர்ணமி கிரிவலம் பக்தர்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து தர நடவடிக்கை தென் கைலாயம் என அழைக்கப்படும்

கலசபாக்கம், ஏப். 23:  கலசபாக்கம் அருகே 4560 அடி உயரமுள்ள பர்வத மலைக்கு இன்று சித்ரா பவுர்ணமியையொட்டி வருகை தரும் பக்தர்களின் வசதிக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தென் கைலாயம் என அழைக்கப்படும் 4560 அடி உயரமுள்ள பர்வத மலையில் இன்று சித்ரா பவுர்ணமி முன்னிட்டு இந்த ஆண்டு வழக்கத்தை விட பக்தர்களின் எண்ணிக்கை அதிக அளவில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பக்தர்களின் வசதிக்காக குடிநீர் மின்விளக்கு, சுகாதாரம் பாதுகாப்பு உள்ளிட்ட வசதிகள் செய்து தர தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு ஆய்வு கூட்டம் நேற்று மாலை கலசபாக்கம் தாலுக்கா அலுவலகத்தில் நடைபெற்றது. வழக்கத்தை விட பக்தர்களின் எண்ணிக்கை அதிக அளவில் இருக்கும் என்பதால் மலையேறும் பக்தர்களின் வசதிக்காக குடிநீர் வசதி, சுகாதாரம் செய்து தர நடவடிக்கை மேற்கொள்ளவும், அதேபோல் செங்குத்தான கடபாரை படி ஏறும் போது பக்தர்களுக்கு தேவையான பாதுகாப்பு வசதிகளை செய்து தருதல், பக்தர்களின் வசதிக்காக சிறப்பு பேருந்து வசதிகளை இயக்குதல் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என பல்வேறு துறை சார்ந்த அதிகாரிகள் பங்கேற்ற கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. கூட்டத்தில் தாசில்தார் ராஜராஜேஸ்வரி செயல் அலுவலர் வசந்தி ஆய்வாளர் நடராஜன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

The post 4560 அடி உயரமுள்ள பர்வத மலையில் இன்று சித்ரா பவுர்ணமி கிரிவலம் பக்தர்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து தர நடவடிக்கை தென் கைலாயம் என அழைக்கப்படும் appeared first on Dinakaran.

Related Stories: