திருவண்ணாமலை மாவட்டத்தில் 3 ஆண்டுகளில் ₹4127 கோடி மதிப்பில் திட்டப்பணிகள் நடந்துள்ளது சாதனைகளை பட்டியலிட்டு அமைச்சர் எ.வ.வேலு பேச்சு வேட்பாளர் சி.என்.அண்ணாதுரையை ஆதரித்து இறுதிகட்ட பிரசாரம்

திருவண்ணாமலை, ஏப்.18: திருவண்ணாமலை தொகுதியில் போட்டியிடும் இந்தியா கூட்டணியின் திமுக வேட்பாளர் சி.என்.அண்ணாதுரையை ஆதரித்து, நேற்று திருவண்ணாமலையில் வீதி வீதியாக சென்று பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு வாக்கு சேகரித்தார். சமுத்திரம் நகர், கல்நகர், கட்டபொம்மன் தெரு, மத்தலாங்குளத்தெரு, சின்னக்கடை தெரு, நாவக்கரை, பெருமாள் நகர், கீழ்நாத்தூர் உள்ளிட்ட நகரின் பல்வேறு பகுதிகளில் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டிருந்து உற்சாக வரவேற்பு அளித்தனர். அதைத்தொடர்ந்து, திருவண்ணாமலை காந்தி சிலை அருகே நேற்று மாலை 5 மணியளவில், தேர்தல் பிரசார நிறைவு பொதுக்கூட்டம் நடந்தது.

அப்போது, திமுக வேட்பாளர் சி.என்.அண்ணாதுரையை ஆதரித்து, பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு பேசியதாவது: ெகாேரானா பேரிடர் காலத்தில் ஒவ்வொரு குடும்பத்துக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின் ₹4 ஆயிரம் வழங்கினார். விடியல் பயணம், புதுமைப் பெண் திட்டம், கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம், காலை உணவு திட்டம், 2 லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு, நம்மை காக்கும் 48 திட்டம், 74 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாயப்பு, ₹2776 கோடி மகளிர் குழு கடன் தள்ளுபடி என எண்ணற்ற திட்டங்களை முதல்வர் நிறைவேற்றியிருக்கிறார். கலைஞர் கனவு திட்டத்தின் மூலம் 8 லட்சம் குடிசை வீடுகள் கான்கீரீட் வீடுகளாக கட்டித்தரப்படும், அடுத்த இரண்டு ஆண்டுகளில் 50 ஆயிரம் இளைஞர்களுக்கு அரசு வேலை வழங்கப்படும் என முதல்வர் அறிவித்திருக்கிறார். 5 ஆயிரம் நீர்நிலைகளை ₹500 கோடியில புனரமைக்கப்பட உள்ளன. ₹’665 கோடியில் புறவழிச்சாலைகள் உயர்மட்ட பாலங்கள் அமைக்கப்பட உள்ளன.

திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த மூன்று ஆண்டுகால திமுக ஆட்சியில், ெபாதுப்பணித்துறை மூலம் ₹273 கோடி, நீர்வளத்துறை மூலம் 185 கோடி, நெடுஞ்சாலைத்துறை மூலம் ₹2170 கோடி, வேளாண்துறை மூலம் ₹159 கோடி, அறநிலைத்துறை மூலம் ₹63 கோடி, ஊரக வளர்ச்சித்துறை மூலம் ₹1277 கோடி மதிப்பிலான பணிகள் நடந்திருக்கிறது. ₹2180 கோடி பயிர் கடன் வழங்கப்பட்டுள்ளது. 61 ஆயிரம் மகளிர் குழுக்களுக்கு ₹3600 கோடி கடனுதவி வழங்கப்பட்டுள்ளது. மேலும், 203 திருக்கோயில்களுக்கு குடமுழக்கு நடத்தியிருக்கிறோம். ஆதி திராவிடர் பகுதியில் 67 கோயில்களுக்கு ₹1.34 கோடியில திருப்பணிகள் நடந்திருக்கிறது. அதேபோல், திருவண்ணாமலையில் ₹30 கோடியில் புதிய பஸ் நிலையம், ₹29 கோடியில் புதிய காய்கறி மார்க்கெட், மாநகராட்சியாக தரம் உயத்தியது, ₹15 கோடியில்மாட வீதி தரம் உயர்த்தும் பணி என பல்வேறு பணிகள் நடந்திருக்கிறது. கடந்த 10 ஆண்டுகால பாஜக ஆட்சியின் திட்டங்கள் என ஏதேனும ஒன்றையாவது சொல்ல முடியுமா.

நான் முதல்வன் திட்டத்தின் மூலம், சிவில் சர்வீஸ் தேர்வில் தமிழ்நாட்டில் 37 பேர் ஐஏஎஸ் பணிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். திராவிட மாடல் ஆட்சிக்கு கிடைத்த வெற்றி இதுதான். ஒன்றிய பாஜக ஆட்சியில் அரிசி, பருப்பு, பெட்ேரால், டீசல், காஸ், தங்கம் என எல்லாவற்றின் விலையும் உயர்ந்துவிட்டது. ஜிஎஸ்டி வரி தமிழ்நாட்டுக்குள் நுழைய காரணமானவர் எடப்பாடி பழனிசாமி. மாநில உரிமையை விட்டுக்கொடுத்துவிட்டனர். ஜிஎஸ்டி வரியை பெற்று, குஜராத்தில் ₹3 ஆயிரம் கோடியில் பட்டேலுக்கு சிலை வைத்துள்ளனர். ₹800 கோடியில் மோடி ஸ்டேடியம் கட்டியுள்ளனர்.

தமிழ் மொழியை பாதுகாப்பதாக சொல்லும் மோடி அரசு, தமிழ்வளர்ச்சிக்காக ஒதுக்கியது வெறும் ₹22 கோடி. ஆனால், சமஸ்கிருத வளர்ச்சிக்காக ஒதுக்கிய நிதி ₹643 கோடி. ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் இருந்தபோது நாட்டின் கடன் ₹55 லட்சம் கோடி. ஆனால், பாஜக ஆட்சியில் பிரதமர் மோடி வாங்கி வைத்திருக்கும் கடன் ₹183 லட்சம் கோடி. டில்லியில் போராடிய 12 ஆயிரம் விவசாயிகள் மீது வழக்கு போட்டனர். தமிழ்நாட்டில் உற்பத்தியாகும் கைத்தறி ஆடைகளுக்கும் ஜிஎஸ்டி வரி போட்டுள்ளனர். விவசாயிகள், நெசவாளர்கள் என அனைத்துத்தரப்பு மக்களும் பாஜக ஆட்சியில் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, இந்த தேர்தலில் ஒன்றிய பாஜக ஆட்சி அகற்றப்பட வேண்டும். இந்தியா கூட்டணி வெல்ல வேண்டும். அதற்கு, உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து சி.என்.அண்ணாதுரையை வெற்றிபெற செய்ய வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில், துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி, மாநில மருத்துவர் அணி துணைத் தலைவர் எ.வ.வே.கம்பன், தலைமை செயற்குழு உறுப்பினர் இரா.ஸ்ரீதரன், நகர செயலாளர் கார்த்திவேல்மாறன், மாவட்ட பொருளாளர் எஸ்.பன்னீர்செல்வம், மாவட்ட துணை செயலாளர் பிரியா விஜயரங்கன், டிவிஎம் நேரு, காங்கிரஸ் வெற்றிச்செல்வன், கம்யூனிஸ்ட் சிவக்குமார், தங்கராஜ், மதிமுக சீனிகார்த்திகேயன், விசிக நியூட்டன், மனித நேய ஜனநாயக கட்சி தலைவர் தமிமுன்அன்சாரி, முஸ்லீம் லீக் சுலைமான், யாதவர் மக்கள் இயக்கம் கு.ராஜாராம், மக்கள் நீதிமய்யம் அருள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

The post திருவண்ணாமலை மாவட்டத்தில் 3 ஆண்டுகளில் ₹4127 கோடி மதிப்பில் திட்டப்பணிகள் நடந்துள்ளது சாதனைகளை பட்டியலிட்டு அமைச்சர் எ.வ.வேலு பேச்சு வேட்பாளர் சி.என்.அண்ணாதுரையை ஆதரித்து இறுதிகட்ட பிரசாரம் appeared first on Dinakaran.

Related Stories: