ஷேர் ஆட்டோக்களுக்கு கட்டண நிர்ணயம் கூடுதல் கட்டணம் வசூலிக்கக் கூடாது கலெக்டர் உத்தரவு திருவண்ணாமலையில் சித்ரா பவுர்ணமி முன்னிட்டு

திருவண்ணாமலை, ஏப். 23: திருவண்ணாமலையில் சித்ரா பவுர்ணமி முன்னிட்டு ஷேர் ஆட்டோவில் தனிநபர் கட்டணம் நிர்ணயித்தபடி வசூலிக்க வேண்டும் என கலெக்டர் உத்தரவிட்டார். திருவண்ணாமலையில் பிரசித்தி பெற்ற சித்ரா புவுர்ணமி கிரிவலம் இன்று நடைபெறுகிறது. அதை ஒட்டி, தமிழ்நாடு மற்றுமின்றி பல்வேறு மாநிலங்களில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்து 25 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அதை ஒட்டி, திருவண்ணாமலையில் ஷேர் ஆட்டோ கட்டணம் முறைப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, ஷேர் ஆட்டோவில் தனி நபர் ஒருவருக்கு வசூலிக்க வேண்டிய கட்டணம் நிர்ணிக்கப்பட்டுள்ளது. மேலும் திருவண்ணாமலை நகரில் சித்ரா பவுர்ணமி முன்னிட்டு இயக்குவதற்கு 960 ஆட்டோக்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும், அந்த ஆட்டோக்களுக்கு உரிய அனுமதி அட்டை வழங்கப்பட்டு அதனை ஆட்டோவில் ஒட்டி வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை விட கூடுதலாக வசூலிக்கக் கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது.

இது குறித்து கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்திருப்பதாவது: தனிநபர் கட்டணம் ₹50 மட்டும் ஆட்டோ ரிக்ஷா செல்லும் வழித்தடம்
அத்தியந்தல் தற்காலிக பேருந்து நிலையம் முதல் அரசு கலை கல்லூரி மைதானம் வரை (பெரும்பாக்கம்)
அத்தியந்தல் தற்காலிக பேருந்து நிலையம் முதல் அங்காளம்மன் கோயில் வரை (தண்டராம்பட்டு ரோடு)
திருக்கோவிலூர் ரோடு முதல் அத்தியந்தல் வரை (பெரும்பாக்கம்)
தனிநபர் ஒன்றுக்கு கட்டணம் ரூ.30 மட்டும்
ஆட்டோ ரிக்ஷா செல்லும் வழித்தடம்
வேட்டவலம் தற்காலிக பேருந்து நிலையம் முதல் திருக்கோவிலூர் தற்காலிக பேருந்து நிலையம் வரை
திருக்கோவிலூர் தற்காலிக பேருந்து நிலையம் முதல் அங்காளம்மன் கோயில் வரை (தண்டராம்பட்டு ரோடு)
மணலுார் பேட்டை சாலை முதல் அங்காளம்மன் கோயில் வரை (தண்டராம்பட்டு ரோடு)
அரசு கலை கல்லுாரி முதல் அங்காளம்மன் கோயில் வரை (தண்டராம்பட்டு ரோடு)
திண்டிவனம் ரோடு தற்காலிக பேருந்து நிலையம் முதல் திருவள்ளுவர் சிலை வரை (திருக்கோவிலூர் ரோடு)
திண்டிவனம் ரோடு தற்காலிக பேருந்து நிலையம் முதல் காந்தி நகர் பைபாஸ் ரோடு 6வது குறுக்கு தெரு வரை (அமோகா ஓட்டல்)
நல்லவன்பாளையம் முதல் அங்காளபரமேஸ்வரி கோவில் வரை (தண்டராம்பட்டு ரோடு)
பச்சையம்மன் கோவில் முதல் கிருஷ்ணா லாட்ஜ் வரை (சங்கு ஊதும் இடம்)
தீபம் நகர் பைபாஸ் ரோடு முதல் அண்ணா நுழைவு வாயில் வரை
எஸ்ஆர்ஜிடிஎஸ் பள்ளி முதல் அவலூர்பேட்டை ரயில்வே கேட் வரை

The post ஷேர் ஆட்டோக்களுக்கு கட்டண நிர்ணயம் கூடுதல் கட்டணம் வசூலிக்கக் கூடாது கலெக்டர் உத்தரவு திருவண்ணாமலையில் சித்ரா பவுர்ணமி முன்னிட்டு appeared first on Dinakaran.

Related Stories: