அம்பேத்கர் நினைவு நாள் அனுசரிப்பு

பழநி, டிச. 7: பழநியில் அம்பேத்கர் நினைவு நாளையொட்டி விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வீரவணக்கம் செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது. தொகுதி செயலாளர் முத்தரசு தலைமை வகிக்க, மாவட்ட செய்தி தொடர்பாளர் பொதினி வளவன், பொருளாளர் திருமாறன்,  துணை செயலாளர் பாவேந்தன் முன்னிலை வகித்தனர். நகர செயலாளர் மணவாளன், ஒன்றிய செயலாளர் ஜெயசீலன் வரவேற்றனர். பழநி எம்எல்ஏ ஐ.பி.செந்தில்குமார் அம்பேத்கர் உருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். இதில் திமுக நகர செயலாளர் தமிழ்மணி, துணை செயலாளர் சக்திவேல், இளைஞரணி அமைப்பாளர் லோகநாதன், நெசவாளரணி பாஸ்கரன், பொறியாளரணி வீரமணி,மாவட்ட பிரதிநிதி அழகேசன், மாவட்ட இலக்கிய அணி துணை அமைப்பாளர் முருகானந்தம், ஒன்றிய இளைஞரணி நிர்வாகிகள் ரஞ்சித்குமார், இதயத்துல்லா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

*கொடைக்கானலில் விசிகவினர் மூஞ்சிக்கல், பஸ்நிலைய பகுதிகளில் அம்பேத்கர் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர். *நத்தத்தில் பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் மூன்று லாந்தரில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு தொகுதி தலைவர் சுப்பிரமணி தலைமையில் மாலையணிவித்து மரியாதை செலுத்தினர். இதில் ஒன்றிய செயலாளர் சந்திரன், அலுவலக செயலாளர் பாண்டியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். விசிக சார்பில் ஒன்றிய செயலாளர்கள் மயில்ராஜ், முத்து மாணிக்கம், துணை செயலாளர் தமிழ்முகம் உள்ளிட்டோர் அம்பேத்கர் சிலைக்கு மரியாதை செலுத்தினர்.

*வத்தலக்குண்டுவில் விசிக சார்பில் நில உரிமை மீட்டு மாநில துணை செயலாளர் உலகநம்பி, நிர்வாகிகள் அலாவுதீன், திருமா செழியன் உள்ளிட்டோர் அம்பேத்கர் படத்திற்கு மரியாதை செலுத்தினர். *நிலக்கோட்டையில் விசிக ஒன்றிய செயலாளர் போதுராசன், தொகுதி செயலாளர் தமிழரசன், திக ஒன்றிய செயலாளர் ஜெயபிரகாஷ் அம்பேத்கர் படத்திற்கு மரியாதை செலுத்தினர்.

Related Stories:

More