மக்கள் குறைதீர் முகாம்

மதுரை, டிச. 7: மதுரை மாவட்டம் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் அனீஷ்சேகர் தலைமையில் நேற்று நடைபெற்றது. அவர் பொதுமக்களிடம் மனுக்களை பெற்றார். முகாமில், இலவச வீட்டுமனைப்பட்டா கேட்டு 40, ஆக்கிரமிப்பு அகற்றகோரி 28, நிலம் தொடர்பாக 13, முதியோர், விதவை, விபத்து நிவாரணம், மாற்றுத்திறனாளி, நலிந்தோர் நலத்திட்ட உதவித்தொகை தொடர்பான 49 மனுக்கள், வேலைவாய்ப்பு கோரி 63 மனுக்கள், அடிப்படை வசதிகள் கோரி 20 மனுக்கள், குடிசை மாற்றுவாரியம், ராஜாக்கூர் வீடுகள் மற்றும் பசுமை வீடுகள் தொடர்பான 173 மனுக்கள் என மொத்தம் 572 மனுக்கள் பெறப்பட்டன. கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் செந்தில்குமாரி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் ராஜ்குமார் உள்ளிட்ட அனைத்துத்துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories:

More