கள்ளிக்குடி அருகே சோகம் ஜெயலலிதா நினைவு தினம்

அலங்காநல்லூர், டிச.6: அலங்காநல்லூர் ஒன்றிய அதிமுக சார்பில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவு தினத்தையொட்டி, அவரது உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இந்த நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர் ரவிச்சந்திரன், முன்னாள் எம்எல்ஏ கருப்பையா, முன்னாள் கூட்டுறவு சர்க்கரை ஆலை தலைவர் ராம்குமார், நகர செயலாளர்கள் அழகு ராஜ்குமார்,  ஊராட்சி தலைவர் சேதுசீனிவாசன், கூட்டுறவு வங்கி தலைவர் பாலாஜி தெய்வம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அமமுக சார்பில் ஒன்றிய செயலாளர் வக்கீல் கோடீஸ்வரன், நகர செயலாளர் ராஜபிரபு ஆகியோர் ஜெயலலிதா உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் அஞ்சலி செலுத்தினர்.

மேலூர்:நகர் அதிமுக சார்பில், மேலூர் பஸ்நிலையம் முன்பு முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 5ம் ஆண்டு நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. முன்னதாக மேலூர் நாகம்மாள் கோயில் அருகே கட்சி தொண்டர்கள் ஊர்வலமாக செக்கடி வழியாக சென்று ஜெயலலிதாவின் உருவப்படத்திற்கு மலர் அஞ்சலி செலுத்தினர். இதில், மேலூர் நகர் செயலாளர் பாஸ்கரன், மாநில எம்ஜிஆர் மன்ற இணைச்செயலாளர் பெரியசாமி என்ற துரைப்பாண்டி, கிழக்கு மாவட்ட பொருளாளர் அம்பலம், நகர் துணைச் செயலாளர்கள் சரவணகுமார், பாண்டி லட்சுமி, மண்டல தகவல் தொழில்நுட்ப துணைத் தலைவர் கவுரிசங்கர், தலைமை கழக பேச்சாளர் மலைச்சாமி உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

மாலையில்கர்ப்பிணி நாய்க்கு மலர் மாலை, திலகமிட்டு வளைகாப்பு நடக்கிறது. அடுத்தபடம்: விருந்தினர்களுக்கு பரிமாறப்பட்ட கலவைச்சாத விருந்து.

Related Stories:

More