வந்தவாசியில் மாற்றுத்திறனாளிகள் தினவிழா பல்திறன் பயிற்சியில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பரிசு

* டிஎஸ்பி வழங்கினார்

வந்தவாசி, டிச.5: வந்தவாசியில் உலக மாற்றுத்திறனாளிகள் தினவிழாவையொட்டி நடந்த நிகழ்ச்சியில் பல்திறன் பயிற்சியில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு டிஎஸ்பி பரிசு வழங்கினார். வந்தவாசி அடுத்த அமையப்பட்டு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி வளாகத்தில் உள்ள வட்டார மையத்தில் மாற்று திறனாளிகள் தின விழா நேற்று நடந்தது.

 நிகழ்ச்சிக்கு ரெட்கிராஸ் சங்க செயலாளர் பா.சீனிவாசன் தலைமை தாங்கினார். வட்டார வள மைய மேற்பார்வையாளர் கே.ஜி.மீனா, நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் க.ஜோதி பாபு ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாற்றுத்திறனாளி சிறப்பு ஆசிரியர் எச்.லத்தீப் வரவேற்றார்.

இதில் சிறப்பு அழைப்பாளராக டிஎஸ்பி வெ.விசுவேஸ்வரய்யா கலந்து கொண்டு, மாற்று திறனாளி மாணவர்களின் தனித்திறமைகளை விளக்கி பேசினார். மேலும் பல்திறன் பயிற்சி நிலைகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கினார். நிகழ்வில் எக்ஸ்னோரா ஆலோசகர் கு.சதானந்தன், பாதிரி ஊராட்சி தலைவர் வெ.அரிகிருஷ்ணன், ரெட்கிராஸ் நிர்வாகி அசாருதீன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முடிவில் ரெட் கிராஸ் சங்க உறுப்பினர் மொ.ஷாஜகான் நன்றி கூறினார்.

Related Stories:

More