வாலிபர் கைது வேட்டவலம் அருகே 2ஆயிரம் லிட்டர் சாராய ஊறல் அழிப்பு

வேட்டவலம், டிச.5: வேட்டவலம் அருகே 2ஆயிரம் லிட்டர் சாராய ஊறைலை போலீசார் பறிமுதல் செய்து அழித்தனர்.  வேட்டவலம் எஸ்.ஐ சுப்பிரமணியன் தலைமையில் தலைமை காவலர்கள் சங்கர், சாதிக், தனிப்பிரிவு காவலர் சசிகுமார், மற்றும் போலீசார் நேற்று வேட்டவலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சின்ன ஓலைப்பாடி கிராமத்தில் தீவிர சாராய ஒழிப்பு ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது செல்லியம்மன் கோயில் அருகே உள்ள மலைபகுதியில் 8 பிளாஸ்டிக் பேரலில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 2000 லிட்டர் சாராய ஊறலை பறிமுதல் செய்து கீழே கொட்டி அழித்தனர். மேலும் இது தொடர்பாக விழுப்புரம் மாவட்டம், கண்டாச்சிபுரம் வட்டம், வெள்ளம் புத்தூர் கிராமத்தை சேர்ந்த கோவிந்தன் (22) என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories:

More