காரியாபட்டி அருகே முதல்வருக்கு நன்றி ெதரிவித்து இனிப்பு வழங்கிய பெண்கள்

காரியாபட்டி, டிச. 3: காரியாபட்டி அருகே மல்லாங்கிணறு பேரூராட்சிக்கு நூறுநாள் வேலை திட்டத்தை பொதுமக்கள் பயன்பெறும் வகையில் செயல்படுத்திட ஆணை வழங்கப்பட்டுள்ளது. இதுவரை கிராம ஊராட்சிகளில் செயல்படுத்தி வந்த நூறு நாள் வேலைத் திட்டத்தை தமிழகத்தில் முதல் முறையாக பேரூராட்சியில் உள்ள மக்கள் பயன்பெறும் வகையில் மல்லாங்கிணறு பேரூராட்சிக்கு ஆணை வழங்கப்பட்டுள்ளது. இதனால் பேரூராட்சிக்கு உட்பட்ட 15-வார்டு பொதுமக்களும் நன்றி தெரிவித்து சுவரொட்டிகள் ஒட்டி, தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், இதற்கு பெரும் முயற்சி எடுத்து ஆணை பெற்று தந்த தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு உட்பட தமிழக அரசு அதிகாரிகளுக்கும் நன்றி தெரிவித்தனர். மேலும் இனிப்பு வழங்கி கொண்டாடினர்.

Related Stories:

More