மயங்கி விழுந்து முதியவர் பலி

வலங்கைமான், ஏப்.17: வலங்கைமான் அருகே உள்ள கொட்டையூர் நடுத்தெருவை சேர்ந்த உலகையன்(60). இவர் கடந்த 15ம்தேதி வீட்டின் அருகில் உள்ள டீக்கடைக்கு நடந்து சென்று கொண்டிருந்தபோது ரோட்டில் திடீர் என மயக்கம் போட்டு விழுந்துள்ளார். இதனையடுத்து லேசான காயமடைந்த அவரை சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி உலகையன் இறந்தார். இது குறித்து வலங்கைமான் போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.

Related Stories:

>