மண்டேலா திரைப்படத்தை தடை செய்யக்கோரி ஆர்ப்பாட்டம்

செய்யாறு, ஏப்.14: செய்யாறில் மண்டேலா திரைப்படத்தை தடை செய்யக்கோரி முடி திருத்துவோர் முன்னேற்ற சங்கத்தினர் 50க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். செய்யாறு மார்கெட் அம்மா உணவகம் எதிரே செய்யாறு முடி திருத்துவோர் முன்னேற்ற சங்க தலைவர் மதி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது. அப்போது முடி திருத்தவோரை இழிவுபடுத்தும் வகையில் மண்டேலா திரைப்படத்தில் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளது. எனவே இந்த படத்தை முழுமையாக தடை செய்ய வேண்டும். மேலும், அந்த படத்தின் தயாரிப்பாளர், இயக்குனர், நடிகர் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்ய வேண்டும் என ஆர்பாட்டத்தில் முழக்கமிட்டனர்.

Related Stories:

>