‘அனைவரையும் ஒழித்துக்கட்டிவிடுவோம்’ போலீசை மிரட்டிய 2 வாலிபர்கள் கைது

வந்தவாசி, ஏப்.13: வந்தவாசியில் போலீசாரை மிரட்டிய 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர். திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி கோட்டை பகுதியை சேர்ந்தவர்கள் சுபாஷ்(28), அப்துல் ரஹீம்(30). இவர்கள் பஜார் வீதியில் உள்ள ஒரு பழக்கடையில் வேலை செய்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று முன்தினம் இருவரும் கோட்டை மூலை வழியாக வந்த அரசு பஸ்சை மடக்கி கண்ணாடியை உடைக்க முயற்சித்ததாக கூறப்படுகிறது. இதனை தடுத்த பொதுமக்களிடம், ‘நாங்கள் யார் தெரியுமா?. உங்கள் அனைவரையும் ஒழித்துக்கட்டிவிடுவோம்’ என மிரட்டினார்களாம்.

இதுகுறித்து தகவலறிந்த வந்தவாசி தெற்கு எஸ்ஐ மஞ்சுநாதன் மற்றும் ேபாலீசார் விரைந்து வந்து விசாரித்தனர். அப்போது அவர்கள் போலீசாரையும் ஒழித்துக்கட்டிவிடுவோம் என மிரட்டியதாக தெரிகிறது. இதுகுறித்து எஸ்ஐ மஞ்சுநாதன் கொடுத்த புகாரின்பேரில் இன்ஸ்பெக்டர் குமார் வழக்குப்பதிவு செய்து சுபாஷ், அப்துல்ரஹீம் இருவரையும் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி வந்தவாசி கிளை சிறையில் அடைத்தார்.

Related Stories:

>